உக்ரைன் – ரஷ்யா / அண்மைய 7 செய்திகளின் சுருக்கம்

4 years ago
Sri Lanka
(83 views)
aivarree.com

உக்ரைன் ரஷ்ய மோதல் விடயத்தில் இறுதியாக பதிவான 7 முக்கிய செய்திகளின் சுருக்கம் வருமாறு.

1) மேற்கத்தய நாடுகள் தமக்கு எதிரான செயற்பாடுகளை எடுத்து வைக்கும் நிலையில், ரஷ்யாவின் அணுவாயுத படைப்பிரிவை எந்த நேரமும் தயாராக இருக்குமாறு ரஷ்ய அதிபர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

2) ரஷ்யாவுடன் பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் இணங்கியுள்ளது. – பெலாரஸ் தலைவர் அலக்‌ஷாண்டர் லுகாசென்கோ மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கிக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது.

3) அமெரிக்கா மேலதிகமாக 54 மில்லியன் டொலர் நிதியை உக்ரைன் மனிதாபிமான தேவைக்காக வழங்குவதாக அறிவித்துள்ளது.

4) இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.

5) கனடா, ரஷ்யாவுடனான தமது வான் பரப்பு பங்கீட்டை உடனடியாக இடைநிறுத்தியது.

6) தங்களது தாக்குதலில் 4,300 ரஷ்ப படையினர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. – எண்ணிக்கை இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

7) ரஷ்ய – உக்ரைன் பிரச்சினையை அடுத்து ஜெர்மனி தமது பாதுகாப்பு ஒதுக்கத்தை அதிகரித்துள்ளது.