நுவரெலியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து இரண்டு தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு BBQ முறையில் இறைச்சியை சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் உட்கொண்ட உணவில் ஏதேனும் விஷம் கலந்து இருக்குமா? அல்லது அவர்கள் பயன்படுத்திய பார்பிக்யூ கருவியில் (BBQ) இருந்து ஏதேனும் விஷவாயு கசிந்து இருக்கக் கூடுமா என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களிருவரும் குருநாகல் – கோக்கரல்ல பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது அவர்களுடைய சடலங்கள் மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
