400 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

5 years ago
tamilnewsline.com

400 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி முகத்துவாரத்தைச் சுற்றியுள்ள ஹெந்தல, தொடுபாலவத்தை பகுதியில் கடற்படையினரும் காவல்துறை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில் இந்த கைது இடம்பெற்றது.

களனி முகத்துவாரப் பகுதியில் மீன்பிடி படகு ஒன்றில் 185 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 400 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளா கஞ்சா மற்றும் மீன்பிடி படகு ஆகியவற்றையும் மற்றுமொரு டிங்கி படகும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி சுமார் 120 மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.