பூதாகரமாகவுள்ள மருந்து தட்டுப்பாடு/ மருந்தக உரிமையாளர்கள் எச்சரிக்கை

5 years ago
tamilnewsline.com

நாட்டில் தற்போது 5 சதவீத மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

எதிர்வரும் 3 மாதங்களில் இந்த நிலைமை பூதாகரமாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

டொலர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் உரிய மருந்து பொருட்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படுவதில் தாமதம் நிலவுகிறது.

சில மருந்து பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடுகள் இருப்பதால், அதிக விலைக்கு இறக்குமதி செய்ய அல்லது உற்பத்தி செய்ய துறைசார்ந்தோர் தயங்குகின்றனர்.

இந்தசூழ்நிலையில் அரசாங்கம் தலையிடாவிட்டால், மிகப்பெரிய மருந்து பற்றாக்குறையை நாடு எதிர்நோக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

#டெய்லிமிரர்