பிரபாகரன் குறித்து சரத் ஃபொன்சேகா சொல்லும் கருத்து

4 years ago
Sri Lanka
(147 views)
aivarree.com

பிரபாகரன் இறுதி யுத்தத்தில் சரணடைந்து மரணித்தார் என அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா கூறியமை தொடர்பாக, காலைகதிர் பத்திரிகைக்கு யுத்தகால இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா கூறிய விடயங்களின் சுருக்கம்.

பிரபாகரனின் சாவை வைத்து அன்று தொடக்கம் இன்று வரை சிலர் அரசியல் செய்து வருகின்றனர்.

இராணுவத்தினருடனான நேரடி மோதலிலேயே பிரபாகரன் உயிரிழந்தார் என்பதும் அவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர் என்பதும் உண்மை.

பிரபாகரன் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவர் என்றாலும், அவர் சிறந்த போர் வீரன் என்பதால் அவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு .

பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் விரும்பி இலங்கை அரசுக்கு அன்று அழுத்தமும் கொடுத்திருந்தன.

எனினும் , பிரபாகரன் எந்தத் தரப்பிடமும் சிக்காமல் இறுதி வரைப் போராடியே சாவடைந்தார், என்றார்.

காலைகதிர்