ஒருநாள் யாழ்ப்பாணம் செல்ல 3.4 மில்லியனை செலவிட்ட கொழும்பு MC

4 years ago
Sri Lanka
(100 views)
aivarree.com

கொழும்பு மாநகர சபை (MC) உறுப்பினர்கள் குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தது.

யாழ்ப்பாண மா நகரசபை மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேசசபை என்பவற்றுடன் கொழும்பு மா நகரசபை சகோதர ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெற்றது.

கொழும்பு மாநகரசபையின் முதல்வர் ரோசி சேனாநாயக்கவுடன் 80 உறுப்பினர்கள் இந்த விஜயத்தில் ஈடுபட்டனர்.

அவர்களது தங்குமிட செலவாக 2.4 மில்லியன் ரூபாவும், போக்குவரத்து செலவுகளாக 394,000 ரூபாவும், விளையாட்டு ஆடைகளுக்காக 295,000 ரூபாவும், தண்ணீர்போத்தல்களுக்காக 200,000 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

இந்த விபரங்களை கொழும்பு மாநகர சபையின் ஜேவிபி உறுப்பினர் ஹேமந்த குமார வெளிப்படுத்தியுள்ளார்.