உக்ரேன் / ராஜதந்திர தீர்வுக்கு இன்னும் வாய்ப்பு / பைடன் – பொரிஸ்

4 years ago
World
(55 views)
aivarree.com

உக்ரேன் விடயத்தில் ராஜதந்திர ரீதியான தீர்வுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதியும் பிரித்தானியப் பிரதமரும் இணங்கியுள்ளனர்.


ஜோ பைடன் மற்றும் பொரிஸ் ஜொன்சனுக்கு இடையில் நேற்று 40 நிமிட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.


இதன்போது, ரஷ்யாவின் செயற்பாடு குறித்து எச்சரிக்கப்பட்டாலும், தீர்வுக்கான வாய்ப்பு இருப்பதாக இணங்கப்பட்டது.


ரஷ்யா, உக்ரேன் எல்லையில் 100,000க்கும் அதிகமான துருப்பினரை ஈடுபடுத்தியுள்ளது.


எனினும் உக்ரேனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.