விமல் வீரவன்சவும் ஆளுங்கட்சியின் நாடகமும்
விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் பதவி நீக்கப்பட்டமையும், அதன் பின்னரான அவர்களின் அறிவிப்புகளும் திட்டமிட்ட நாடகங்களே என்றுதான் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். நானும் அதே நிலைப்பாட்டோடுதான் இருக்கிறேன்.அதில் மாற்றுக் கருத்தே இல்லை. இதன் முதல் பாகம் ஆனால், அவர்கள் எதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்? அரசாங்கத்திடம் அவர்கள் கண்டுகொண்ட முக்கியமான விடயம் என்ன? போன்றவற்றை இந்தவாரம் பார்க்கலாம். விமல்வீரவன்ச, தற்போதைய சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வருவதற்கு அதிமுக்கிய பங்களிப்பை மேற்கொண்டவர். நமக்கெல்லாம் தெரியும், இனவாதம் […]
விமல் உதய நாடகமாடுகிறார்களா? – சிக்கலோனின் சிறப்புக் கட்டுரை
விமல் உதய நாடகமாடுகிறார்களா? என்பதுதான் நாட்டு மக்கள் பெரும்பாலானோரது தற்போதைய ஒரே கேள்வியாக இருக்கிறது. அமைச்சர்களாக இருந்து பதவி நீக்கப்பட்ட விமல்வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி, அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். முக்கியமாக விமல் வீரவன்ச முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது தாக்கம் செலுத்தும். பசில் – விமல் வீரவன்ச முரண்பாடுகள் பசில் ராஜபக்ஷவுக்கும் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக முரண்பாடுகள் நிலவி வந்துள்ளன என்பது இந்த செய்தியாளர் சந்திப்பில் விமலும் உதயவும் தெரிவித்திருந்த கருத்துக்கள் உறுதி செய்கின்றன. எப்படியாவது ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பசில் ராஜபக்ஷ நீண்டகாலமாக அரசியலில் போராடி […]
இலங்கை – இந்திய இரண்டாவது T20 – முன்னோட்டம் (Preview)
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 கிரிக்கட் போட்டி சனிக்கிழமை தரம்சாலாவில் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியாவுடனான இறுதி T20 போட்டியில் வெற்றிபெற்றமையானது இலங்கை கிரிக்கட் அணிக்கு ஒரு புத்துயிர்ப்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 62 ஓட்டங்களால் பெரும் தோல்வியைச் சந்தித்து, அந்த எதிர்பார்ப்பை முறியடித்துக் கொண்டது. இலங்கையின் முக்கிய வீரர்கள் சிலர் கொவிட் மற்றும் காயம் காரணமாக உள்ளடக்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் மற்றும் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஆகியோர் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரையில் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் தோல்வியின் பின்னர் செய்துள்ள சில முக்கியமான மாற்றங்கள், இந்தியா சரியான திசையில் பயணிப்பதாகக் கொள்ளப்படுகிறது. முக்கியமாக முதல் 3 துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர். விளையாட்டு செய்திகளை ‘மட்டும்’ வட்சப்பில் பெற்றுக் கொள்ள […]
குற்றப் பிரதேசமாக மாறியுள்ள கும்புக்கன் ஓயா – அருள்கார்க்கி
இந்தக்கட்டுரை INTERNEWS இன் EARTH JOURNALISM NETWORK இன் அனுசரணையில் அறிக்கையிடப்பட்டது. இலங்கையின் பிரதான இயற்கை வளமாக நீர்வளம் காணப்படுவதுடன் இது அன்று தொடக்கம் இந் நாட்டின் அபிவிருத்திக்கு அளப்பரிய பங்காற்றும் பிரதான காரணியாகவும் விளங்குகிறது. விவசாய நாடான இலங்கையில் அன்று தொடக்கம் இன்று வரை பல்வேறுபட்ட நீர்ப்பாசன முறைகளூடாகவும் இந்நாட்டின் விவசாய பொருளாதாரத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பு அளப்பரியது. இது தவிர கைத்தொழில், சேவை வழங்கல், குடிநீர் தேவை என்பன மட்டுமல்லாது பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும், சுற்றுலா கைத்தொழிலுக்கும், நீர்மின் உற்பத்திகளுக்கும். இலங்கையின் நீர்வளம் மிகமுக்கிய மூலமாக அமைந்துள்ளது. இலங்கை சுமார் 103 பிரதான […]


