காதலர் தினத்தில் 36 இளைஞர், யுவதிகள் கைது!

4 years ago
Sri Lanka
(42 views)
aivarree.com

காதலர் தினத்தை முன்னிட்டு பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் இருவர் உட்பட 36 சந்தேக நபர்பகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விருந்து கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, மேற்படி விருந்திற்கு வருகை தந்தவர்கள் கண்டியைச் சூழ உள்ள பிரபல வர்த்தகர்களின் பிள்ளைகள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போதைப்பொருள்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.