பயங்கரவாத தடை சட்டம் / பொதுசன வாக்கெடுப்பை நடத்த கோரி மனு.

4 years ago
Sri Lanka
(55 views)
aivarree.com

பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த வரைவில் உள்ள சில சரத்துக்கள், அரசியல் யாப்புக்கு விரோதமானது.

எனவே அவற்றை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுசன வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடுமாறுகோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகள் மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.