சென்னையில் கூட்டம் ‘உலகத் தமிழ் பாராளுமன்றம்’

4 years ago
Sri Lanka
(46 views)
aivarree.com

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் கடந்த 7 ஆண்டுகளாக உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடத்தி வருகிறது. 


இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சங்கங்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், தமிழகத்திற்குப் பிரவேசித்து தம் உறவுகளைச் சந்தித்து சமுதாயம் மேம்படுவதற்கான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 


இவ்வாண்டு மார்ச் 11ஆம் திகதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் ஒரு நிகழ்வாக உலகத் தமிழ் பாராளுமன்றமும் கூட உள்ளது.


கலை, கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றமடைய நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அயல்நாடுகளில் நமக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் இவ்வமைப்பின் மூலம் பலர் பயன் பெறுகின்றனர்.

 
இந்நிகழ்வில் 12 நாடுகளிலிருந்து 152 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் உலகத் தமிழ் பாராளுமன்ற அமைப்பாளருமான செல்வகுமார் தெரிவித்தார்.