மூன்றாம் தடுப்பூசி பெற்றால் கொவிட் மரணம் இல்லை / GMOA

4 years ago
Sri Lanka
(118 views)
aivarree.com

Covdi-19 இன் மூன்றாவது தடுப்பூசியை பெற்றவர்கள் Covdi-19 நோய்த்தொற்றால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் (GMOA) சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே, மூன்றாவது தடுப்பூசி தொடர்பாக வெளியாகும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் தடுப்பூசியின் முதல் செலுத்துகையை எடுப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு இரண்டாவது செலுத்துகையை எடுக்க வேண்டும்.

இரண்டாவது தடுப்பூசி எடுப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மூன்றாவது செலுத்துகையை எடுக்க வேண்டும், என்றார்.