இந்தியாவிடம் விமானத்தை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை

5 years ago
tamilnewsline.com

டொலர் பற்றாக்குறைக்கு மத்தியில் இந்தியாவிடம் இருந்து Dornier விமானத்தைக் கொள்வனவு செய்யும் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா சென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்த போது இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தவிடயம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், இரு தரப்பிலிருந்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்பாகவும் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 13ம் திருத்தச் சட்ட அமலாக்கம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது.

New Indian Express