விசேட பொருட்கள் சேவைகள் வரி சட்டமூல விவாதம் ஒத்திவைப்பு

5 years ago
tamilnewsline.com

அரசாங்கம் அமுலாக்கத் திட்டமிட்டுள்ள விசேட பொருட்கள் சேவைகள் வரி அறவிடல் சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றில் 9 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


எனவே இந்த சட்டமூலம் வியாழக்கிழமை பாராளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.


குறித்த மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம், சபாநாயகருக்குக் கிடைக்கப் பெற்றதன் பின்னர், விவாத திகதி தீர்மானிக்கப்படும்.


மதுபானம், வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கான வரி அறவிடல் சம்பந்தமாக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.