முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனை கண்டித்து வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை, இலங்கை சரியான திசையில் பயணிக்கவில்லை என்பதைக் காட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்ற உபகுழுவில் அம்பிகா சற்குணநாதன் சாட்சி வழங்கிய போது தெரிவித்திருந்த கருத்துக்களைக் கண்டித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பில் குறித்த பாராளுமன்ற உபகுழு தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டிருப்பதுடன், அரசாங்கம் மனித உரிமை சார்ந்த விடயங்களில் முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
