ஏப்ரல் 21 தாக்குதல் / விசாரணைக்கு பாப்பரசர் ஒத்துழைப்பு

4 years ago
Sri Lanka
(66 views)
aivarree.com

இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதி சஹ்ரான் தலைமையிலான குழு பல்வேறு இடங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி இருந்தது.

இது தொடர்பான விசாரணைகளில் திருப்தி இல்லை என்று, இலங்கை கத்தோலிக்க திருச்சபையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை கத்தோலிக்க பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அதிவணக்கத்துக்குரிய பாப்பரசர் ஃப்ரான்ஷிஸிடம் முறையிட்டிருந்தார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள பாப்பரசர், ஏப்ரல் 21 தாக்குதல் சம்பந்தமான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க உறுதியளித்துள்ளார்.

அருட் தந்தை சிறில் காமினி, டெய்லிமிரர் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் இந்த தகவல்களை வழங்கியுள்ளார்.