மருத்துவ பீட தாக்குதல்/ கைதானோருக்கு பிணை

4 years ago
Sri Lanka
(56 views)
aivarree.com

ராகம மருத்துவ பீட விடுதியில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உட்பட 9 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா 5000 ரூபாய் ரொக்கப் பிணை, மற்றும் 500,000 ரூபாய் சரீர பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு விசாரணை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter