மின்சாரம் துண்டிப்பா?/ திங்கள் தீர்மானம்

5 years ago
Sri Lanka
(148 views)
aivarree.com

இலங்கை மின்சார சபையிடம், மின்னுற்பத்தி செய்வதற்கான எரிபொருள் கையிருப்பு திங்களுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் இந்த வாரத்துக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பாக எரிபொருள் கூட்டுத்தாபனத்துடன் மின்சார சபை இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அதேநேரம் மின்சார பயன்பாடும், தேவைப்பாடும் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் அனைத்து மின்னுற்பத்தி மையங்களையும் இயக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Reported by
Editorial Reporter