பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பசிலின் அதிரடி தீர்மானம்

5 years ago
tamilnewsline.com

அரச செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சு அமைச்சரவை பாத்திரம் முன்வைக்கவுள்ளது.

இதற்கமைவாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கான எரிபொருள் மற்றும் தொலைபேசி கட்டணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

அதேபோல நிர்மாண பணிகள், வெளிநாட்டு பயணங்கள், புதிய ஆட்சேர்ப்பு போன்றவற்றிற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி தவிர அரச அமைப்புக்களுக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter