மின்சார துண்டிப்பை தவிர்க்க முடியாத நிலை

4 years ago
Sri Lanka
(42 views)
aivarree.com

இலங்கையில் நாளாந்தம் மின்சார துண்டிப்பைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


மின்னுற்பத்திக்கு போதுமான எரிபொருள் கிடைக்கப்பெறாமையும், நீர் மின்னுற்பத்தி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளமையுமே இதற்கான காரணம்.


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்ட எரிபொருள் இன்றுடன் நிறைவடைகிறது. 


இதனால் இந்தியாவிலிருந்து நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 


இதற்கான தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் இன்று முதல் நாளாந்தம் மின் விநியோகத் தடையை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.