வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரையில் அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் டொலர் கடன் எல்லை வழங்கியுள்ளது.
மேலும் 1 பில்லியன் டொலர் வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் அவரது விஜயம் இடம்பெறுகிறது.
