சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கான பிணை வழங்கல் குறித்த தீர்ப்பை அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரது பிணை கோரிக்கை பல தடவைகள் நிராகரிக்கப்பட்டன.
தற்போது அவருக்கான பிணை கோரிக்கையை மறுதலிப்பதில்லை என்று சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பிணை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பை பெப்ரவரி 7ம் திகதி வெளியிட மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
