வெளிநாடு செல்வோருக்கு நான்காம் தடுப்பூசி

4 years ago
Sri Lanka
(123 views)
aivarree.com

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அந்த நாட்டின் தேவையின் படி கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உயர்கல்விக்காக வெளியேறிய மாணவர்கள் குழுவொன்றுக்கு அண்மையில் இவ்வாறான விசேட தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சம்பந்தப்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பூசி திட்டம் குறித்தும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.