விமல் வீரவன்சவின் மனைவி தொடர்பான வழக்கு

5 years ago
tamilnewsline.com

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவர் சட்டவிரோதமாக ராஜதந்திர கடவுச் சீட்டு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாடுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி அறிவிக்கப்படும் என வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.