விசேட பண்ட சேவை (GST) சட்டமூலம் – உயர் நீதிமன்றின் வியாக்கியானம் வெளியானது.

4 years ago
Sri Lanka
(68 views)
aivarree.com

விசேட பண்ட சேவை சட்டமூலத்துக்கு எதிரான மனுக்களின் அடிப்படையிலான உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை, சபாநாயகர் செவ்வாய்கிழமை பாராளுமன்றில் அறிவித்தார்.

இதன்படி,

இந்த சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியல் யாப்புடன் இணங்கிச் செல்லவில்லை.

அவற்றை நிறைவேற்ற பாராளுமன்றின் முழுமையான உறுப்பினர் எண்ணிக்கையில் 3ல் 2 பெரும்பான்மை அவசியம்.

அத்துடன் பொதுசன வாக்கெடுப்பின் ஊடாகவும் நிறைவேற்ற முடியும்.

ஆனால் இதற்கான நடைமுறை சாத்திய குறைவின் காரணமாக, அரசியல் யாப்புக்கு முரணான சரத்துக்களை மாத்திரம் திருத்தி நிறைவேற்ற முடியும் என்ற பரிந்துரையையும் உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ளது.