வவுனியா பல்கலைக்கழகம்/ ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

5 years ago
tamilnewsline.com

தரமுயர்த்தப்பட்ட வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெள்ளியன்று (11) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இது,1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு , 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக செயற்பட்டது.

கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக இது தரமுயர்த்தப்பட்டது.

முன்னைய அரசாங்கத்தின் கீழ், உயர்கல்வி அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீமினால், இதனை பிரத்தியேக பல்கலைக்கழகமாக தரமுயர்த்தும் யோசனை கொண்டுவரப்படிருந்தது.

Reported by
Editorial Reporter