ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலில் விருது வென்ற பிரபல நடிகை ஒருவர் பரிதாபமாக பலியாகினார்.
யுக்ரைனின் தலைநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று ரஷ்ய இராணுவம் ரொக்கெட் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் யுக்ரைனில் பிரபல நடிகையான ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.
யுக்ரைன் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருதான ‘Honored Artist of Ukraine’ என்ற விருதை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
