மீனவர்களை திட்டமிட்டு வெளியேற்ற அரசாங்கம் முயற்சி / கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

4 years ago
Sri Lanka
(206 views)
aivarree.com

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சனையை தீர்க்காது நீண்டகாலம் பேணுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தினார்.

வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இந்த பிரச்சனையை நீடிக்க செய்வதன் மூலம் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை இடம்பெயரச் செய்வதே அரசாங்கத்தின் திட்டம் ஆகும் எனக் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் காணிகளைச் சுவீகரித்து பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்ற பாதுகாப்புத் தரப்பினரால் வெளிநாடுகளிலிருந்து வருகின்ற மீனவர்களை ஏன் தடுக்க முடியாது?

அவ்வாறு தடுக்காமல் அவர்களை திட்டமிட்டு அரசாங்கம் அனுமதித்து வருகிறது என்றும் கஜேந்திரகுமார் குற்றம் சுமத்தினார்.

Reported by
Editorial Reporter