மீண்டும் அமைச்சராவேன் – திகாம்பரம்

4 years ago
Sri Lanka
(50 views)
aivarree.com

ஹட்டன் மல்லியப்பு புருட்ஹில் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட புதிய வீடமைப்பு திட்டத்திற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்வு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தவை.

நாட்டிலே தற்போது பொருளாதாரப் பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன.

இதற்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல – இந்த அரசின் முறையற்ற தீர்மானங்களை பிரதான காரணங்களாகும்.

எனவே, நாட்டுக்கும் , எமது மலையக மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி வரவேண்டும்.

சஜித் தலைமையிலான அமைச்சரவையில் நானும் அமைச்சராக இருப்பேன்.

எமது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.