மின்சார நெருக்கடிக்கு தீர்வு வரும் வாய்ப்பு | அமெரிக்க நிறுவனம் முஸ்தீபு

4 years ago
Sri Lanka
(64 views)
aivarree.com

உச்ச நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பைத் தொடர்ந்து இலங்கையில் இயற்கை திரவ எரிவாயு (LNG) கட்டமைப்புக்கான திட்டங்களை அமெரிக்காவின் New Fortress Energy முன்னெடுக்கவுள்ளது.

இந்த நிறுவனம் ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கு ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் களன்கள் இயற்கை திரவ எரிவாயு (LNG) வழங்கும்.

இதன் மூலம் யுகதனவியில் 310 மெகாவோட் மின்சாரமும், சொபாதனவி அனல்மின் நிலையத்தில் 350 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிரான விமர்சனங்களைக் கொண்டிருந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அண்மையில் பதவி நீக்கப்பட்டிருந்தனர்.

அதேநேரம் இந்த உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.