மாணவிகளின் கழிவறையில் கமரா வைத்தது யார்? – நபர் அடையாளம் காணப்பட்டார்.

5 years ago
tamilnewsline.com

கம்பஹாவில் மேலதிக வகுப்புகள் இடம்பெற்ற கட்டிடம் ஒன்றின் பெண்கள் கழிவறையில் கமரா வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கமராவை பொருத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் அவர் கைது செய்யப்படும் வரையில் அவரது அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட மாட்டாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கல்வி நிலையத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இந்த காரியத்தைச் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கழிவறையில் வைக்கப்பட்ட கமரா மூலம், கைப்பேசி அல்லது கணினியில் நேரடியாகக் காட்சிகளைக் காணக்கூடிய வகையில் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.