மட்டக்களப்பு/ குரங்கு தொல்லை

5 years ago
tamilnewsline.com

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள பலகிராமங்களில் குரங்குகள் பிரவேசிக்கின்றன.

மட்டக்களப்பு வாவியோரத்தில் இரவில் தங்கியிருக்கும் இக்குரங்குகள் பகல் வேளைகளில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேத்தாதீவு, மாங்காடு, உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பிரவேசிக்கின்றன.

அங்குள்ள தோட்டங்களிலுள்ள காய்கறிகளையும், வீடுகளில் உள்ள பழமரங்களையும் சேதப்படுத்தி வருவதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குரங்குகளை தடுக்க தகுந்த பொறிமுறை ஒன்றை பொறுப்பு வாய்ந்தவர்கள் அமுல்ப்படுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

செய்திகளை வட்சப்பில் பெற்றுக்கொள்ள கீழுள்ள linkஐ க்ளிக் செய்க.

https://chat.whatsapp.com/DzIgQk7SDjJJVFUqb6BU8w

– நன்றி – மட்டு செய்தியாளர் வடிவேல் சக்திவேல்