பூஜித் – ஹேமசிறிக்கு எதிராக சட்ட மா அதிபர் எடுக்கும் நடவடிக்கை

5 years ago
tamilnewsline.com

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான வழக்கில் இருந்து அண்மையில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்தும், அதனை தடுக்க தவறிவிட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அவர்கள் விடுவிக்கப்பட்டமை தவறானது என்று சுட்டிக்காட்டி சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றின் இந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை முன்னெடுக்க உத்தரவிடுமாறு சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றை கோரியுள்ளார்.