பாடசாலை விடுமுறை நீடிக்கப்படுமா?

4 years ago
Sri Lanka
(383 views)
aivarree.com

இந்த மாதம் 7ஆம் திகதி வழங்கப்பட்ட பாடசாலை விடுமுறை மார்ச் மாதம் 07ம் திகதியுடன் நிறைவடைகிறது.

எனினும் கொவிட் அச்சுறுத்தல் கருதி பாடசாலை விடுமுறை காலத்தை நீடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் அய்வரி செய்திகளுக்கு கருத்து தெரிவித்த போது, அந்த தகவலை முற்றாக மறுத்தார்.

இதுவரையில் அவ்வாறான எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும், திட்டமிட்டபடி பாடசாலைகள் மார்ச் 7இல் ஆரம்பமாகும் எனவும் அவர் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.