பயங்கரவாத தடுப்பு சட்ட திருத்தம்/ சபையில் முன்வைப்பு

5 years ago
tamilnewsline.com

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களின் வரைவு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஷால் இந்த சட்டமூலம் வியாழன் அன்று (10) முன்வைக்கப்பட்டது.

அரசாங்கம் சர்வதேச அழுத்தம் காரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்ள உள்ள திருத்தங்களை அண்மையில் வர்த்தமானியில் வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும் இந்த திருத்தங்கள் போதுமானதல்ல எனவும், இதில் புதிதாக எந்த விடயமும் இல்லை எனவும் எம். ஏ சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் சுட்டிக்காட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reported by
Editorial Reporter