நெருப்பு விலைக்கு டீசல் வாங்கி யாரும் வீணடிப்பார்களா? | ஜனாதிபதியின் உரைக்கு ஹர்ச கடும் எதிர்ப்பு

4 years ago
Sri Lanka
(87 views)
aivarree.com

ஜனாதிபதியின் தேசத்துக்கான உரை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்விகளை எழுப்பியுள்ளார்

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் என முன்பு அறிந்ததால் தான் வாகன இறக்குமதியை தடை செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதனை விமர்சித்துள்ள ஹர்ச டி சில்வா அவ்வாறெனில், எதற்காக வரி குறைப்பு மேற்கொண்டு சுமார் 600 பில்லியன் ரூபா வரி வருமானத்தை இழக்க செய்தீர்கள் என்றும், முன்கூட்டியே IMF செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதைப் போன்று ரூபாவை மிதப்பில் விடுவதற்கு முன்னர் அதன் விலையை நிலையாக பேணுவதற்காக 4 பில்லியன் டொலர்களை வீணடித்தமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, எரிபொருளை சிக்கனமாக பாவிக்கும்படி ஜனாதிபதி கூறியமையை கண்டித்துள்ள அவர் எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தை வழங்குமாறும் கோரியுள்ளார்.

“நெருப்பு விலையில்” எரிபொருளை கொள்வனவு செய்து மக்கள் வீண் அடிப்பார்கள் என ஜனாதிபதி நினைத்திருந்தால் அது பிழையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.