நுவரெலியா மரக்கறி லொறிகளுக்கு இன்றுமுதல் விசேட சலுகை

4 years ago
Sri Lanka
(155 views)
aivarree.com

நுவரெலியாவில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மரக்கறிகளை ஏற்றிச் செல்லும் சுமார் 40 லொறிகளுக்கு வியாழன் (3) முதல் விசேட அனுமதி பத்திரம் வழங்கப்படும்.

இதன் மூலம் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை நிரப்பிக்கொள்ள முடியும்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட லங்காதீபவிடம் இதனைத் தெரிவித்தார்.

மரக்கறி விநியோகத்தை சீராக முன்னெடுக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அவர் கூறினார்.

நகரிலுள்ள இரண்டு பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களும் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

#லங்காதீப