இராஜாங்க அமைச்சர் நிமால் லான்சாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று புதன்கிழமை (16) நடைபெறவுள்ளது.
அவரது அமைச்சின் செயலாளருக்கும் அவருக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து அவர் தமது பிரத்தியேக பணிக்குழுவை அமைச்சு அலுவலகத்தில் இருந்து வெளியேற பணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முரண்பாட்டை தீர்க்கும் நோக்கில் ஜனாதிபதி, லான்சாவை அழைத்திருப்பதாகவும், அதிருப்தியில் உள்ள லான்சா பதவி விலகும் எண்ணத்தில் இருப்பதாகவும் தலவல்கள் வெளியாகியுள்ளன.
