வெள்ளிக்கிழமை முதல் நாளாந்தம் 1 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பிற்பகல் 2.30 முதல் மாலை 6.30க்குள் 1 மணி நேரம் மின் தடை அமுலாகும்.
அதன் பின்னர் மாலை 6.30 இலிருந்து இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 45 நிமிடம் மின் தடை அமுலாகும்.
இதற்கான அனுமதியை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.
