கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல கொவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளது.
பிராணவாயு (ஒக்சிஜன்) தேவைக்குரிய மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 முதல் 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் பதிவான கொவிட் உயிரிழப்புக்களில் மூன்றில் இரண்டு பங்கானோர் எந்தவித கொவிட் தடுப்பூசியும் பெறாதவர்கள் என வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
