நாடாளுமன்றின் உணவுக்கான செலவு 90 மில்லியன் ரூபா

4 years ago
Sri Lanka
(34 views)
aivarree.com

நாடாளுமன்றத்தில் உணவுக்கான வருடாந்த செலவு 90 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் அதிதிகளுக்கு உணவு வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது.

தற்போது நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த செலவுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற நிதிப் பிரிவு தெரிவித்தது.

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட தரவு அறிக்கையின்படி, நாடாளுமன்றின் உணவுக்காக 8 கோடியே 78 இலட்சத்து 28 ஆயிரத்து 82 ரூபா செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Reported by
Editorial Reporter