தாமும் தமது கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் எந்த தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பின் பிரகாரம் தற்போது ஜனாதிபதி தேர்தலையோ பொதுத் தேர்தலையோ நடத்த முடியாது.
உள்ளுராட்சி தேர்தலை மட்டுமே தற்போதைக்கு நடத்த முடியும்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் கூட தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்ற விருப்புடனேயே உள்ளார் என்று பசில் ராஜபக்ஷ கூறி இருக்கிறார்.
