தலவாக்கலை நகரில் இருந்து சிறிது தொலைவில் லோகி தோட்டத்தில் உள்ள ஆலமரம் ஒன்று வெட்டப்பட்டது.
வெட்டப்பட்ட மரம் மின் கம்பம் ஒன்றில் விழுந்ததில், மின்கம்பம் உடைந்து, மோட்டார் சைக்கிள் ஒன்றில் அமர்ந்திருந்த 2 பேர் மீது விழுந்தது.
இதில் காயமடைந்த 2 பேரும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் உயிரிந்ததாக வைத்தியசாலை தரப்பினர் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தனர்.
உயிரிந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மகேஷ்வரன் என்ற 36 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
மேலும் மலையகம் தொடர்பான செய்திகளை வட்சப்பில் பெற, எமது குழுவுடன் இணைந்து கொள்ளுங்கள்.
https://chat.whatsapp.com/KFiwYl8tMRdFaU7vTMIAAR
