தலவாக்கலை நகரில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் (படங்கள்)

4 years ago
Sri Lanka
(32 views)
aivarree.com

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார தடை என்பவற்றுக்கு எதிராக தலவாக்கலை நகரில் சனிக்கிழமை இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் இந்த போராட்டத்துக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.

தடையற்ற மின்சாரத்தை வழங்கக் கோரியும், நாட்டை சரியாக நிர்வகிக்க அரசாங்கம் தவறிவிட்டதாகவும் தெரிவிக்கும் வகையிலான பதாகைகளையும், தீப்பந்தங்களையும் அவர்கள் ஏந்தி இருந்தார்கள்.

தலவாக்கலை நகரில் நடத்தப்பட்ட இதேபோன்ற போராட்டம் ஒன்று கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.