யாழ்ப்பாண சிறையில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 தமிழ் கைதிகள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
சனிக்கிழமை சிறைக்குச் சென்று அவர்களை சந்தித்த அவர்களுடைய உறவினர்கள் இந்த தகவலை ஊடகங்களுக்கு வழங்கினார்கள்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2020 – 2021 ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட அவர்கள் தங்களுடைய வழக்குகளை துரிதப்படுத்தி தங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 23ஆம் திகதி முதல் போராட்டம் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக நிறைவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
