தமிழ் கட்சிகள் வருவதாக சொல்லவில்லை / PMD

4 years ago
Sri Lanka
(39 views)
aivarree.com

தமிழ் கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை (24) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணி சுவிகரிப்பு நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை நிறுத்துமாறும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சி வி விக்னேஸ்வரன், சுமந்திரன், சாணக்கியன், ஸ்ரீதரன் உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவோ அல்லது ஜனாதிபதியை சந்திக்க விரும்புவதாகவோ இந்த குழுவில் யாரும் தங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.