சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ், லம்போகினி, ஜாகுவார், மெர்சிடிஸ் பென்ஸ், ஹம்மர் மற்றும் இரண்டு பேருந்துகளின் ஏலம் திடீரென கடைசி நிமிடத்தில் சுங்கத்துறையால் நிறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும் உரிமையாளர்கள் அறியப்படாத, சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்ட சொகுசு கார்கள் வியாழக்கிழமை ஏலம் விடப்படவிருந்தன.
எனினும், சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜி.வி. ரவிப்பிரியாவின் அறிவுறுத்தலின் பேரில் கடைசி நிமிடத்தில் ஏலம் நிறுத்தப்பட்டது.
ஏலம் ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்த கூடுதல் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த கடந்த சில மாதங்களில், சட்டவிரோதமாக பல வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SundayTimes
