ஜனாதிபதியை சிக்கலில் இழுத்துவிட்ட அமைச்சர்கள்

4 years ago
Sri Lanka
(185 views)
aivarree.com

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரித்து #wearewithgota என்ற பரபுரையை அரசாங்க அமைச்சர்கள் ஆரம்பித்தனர்.

“நாங்கள் கோட்டாவுடன் இருக்கிறோம்” என்று அர்த்தப்படும் வகையிலான இந்த பரப்புரை டுவிட்டரில் அரச அனுசரனையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இந்த பரப்புரை ஆரம்பித்த சில நிமிடங்களில் அதற்கு போட்டியாக சமூக ஊடகங்களில் #gohomegota என்ற பரப்புரையும் ஆரம்பிக்கப்பட்டது.

“வீட்டுக்கு செல்லுங்கள் கோட்டா” என்று அர்த்தப்படும் இந்த பரப்புரை தற்போது

இலங்கையில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.