சிறிலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சியமைக்க தீர்மானம்.

5 years ago
tamilnewsline.com

ஆளுந்தரப்பில் இருந்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிச் செல்லவுள்ள நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சியமைக்கவுள்ளது.


ஆளுந்தரப்பின் முக்கிய அமைச்சர் ஒருவர் வழங்கிய தகவலின்படி, சிறிலங்கா சுதந்திர கட்சியும் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளது.


ஏற்கனவே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் அடங்களாக 16 பேர் ஆளுங்கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


அவர்களுடன் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்துக் கொள்ளவுள்ளது.


இதன்படி தனித்து ஆட்சியமைக்கவுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன, அமைச்சரவையையும் மாற்றியமைக்கவுள்ளதாக குறித்த அமைச்சர் தெரிவித்தார்.