பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சானி அபேசேகர உயர்நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத போலியான குற்றச்சாட்டுக் கடிதம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தம்மைக் கைது செய்ய முயல்வதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசீமிற்கு எதிரான விசாரணைகளைத் தாம் மழுங்கடிக்க முயன்றதாக இதில் போலியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தாம் அறிந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக குலியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சானி அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
